தனிமையே!
வெறுக்கின்றேன் உன்னை…
துணையாக இருப்பாயென நினைத்தேன்
கூடவே அழைத்து வருகின்றாயே
மறப்பதற்கு போராடும் நினைவுகளை…
இதமாக இருப்பாயென நினைத்தேன்
புதுப்பிக்கின்றாயே
உள்ளத்தை புண்ணாக்கிய காயங்களை…
மகிழ்வைத் தருவாயென நினைத்தேன்
வற்றாத ஊற்றாக்குகின்றாயே
விழிகளை…
தனிமையே!
வந்திடாதே…
வந்து என்னை
வதைத்திடாதே…!!!