கரட் சம்பல்
தோல் நீக்கிய துருவிய கரட் – 1 கப்
சிறிதாக நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – தேவையான அளவு
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
இவை யாவையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து சாதத்துடன் பரிமாறவும். தினமும் உண்ணலாம்.
தலைமுடி வளர கரட் உதவுகிறது.
பசளிக் கீரை பருப்புக் கறி
கழுவி சுத்தம் செய்த மைசூர் பருப்பு – 1 கப்
சுத்தம் செய்து நறுக்கிய பசளிக் கீரை – 2 கப்
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் – சிறிதளவு
பூடு – 2 பல்
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கறி வேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப் பால் – 1/4 கப்
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயுடன் பருப்பு வேகுமளவு நீர் விட்டு அவிய விடவும்.
வெந்ததும் அடுப்பை குறைத்து பருப்பை மசிக்கவும்.
தட்டி நசுக்கிய பூடு, மிளகு தூள் பசளிக் கீரை, கறிவேப்பிலை, உப்பு,தேங்காய்ப் பால் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் தேசிக்காய் புளி சேர்த்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
தலைமுடி வளர பசளி, பருப்பு மிகவும் சிறந்த உணவு.

முட்டைக் குழம்பு
அவித்து கோது நீக்கிய முட்டை – 3
தேங்காய்ப் பால் – 1 கப்
சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
பூண்டு பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி
மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
கடுகு, பெருஞ் சீரகம் – தேவையான அளவு
புளி கரைசல், உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, பெரஞ் சீரகம் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் முட்டை, பூண்டு பேஸ்ட் சேர்த்து இரு தரம் கிளறிய பின் புளி கரைசல், உப்பு, தேங்காய்ப் பால், தூள் வகைகள் சேர்த்து தேவையான அளவு வத்தியதும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
முட்டையும் தலைமுடி வளர உதவுகிறது.