கட்டுக்கடங்காமல்
காதோரம் ஊஞ்சலாடும்
உன் கூந்தலிலே
சிக்கித் தவிக்கிறது
என் இதயம்…
மாம்பழக் கன்னங்களையும்
றோஜா இதழ்களையும்
தொட்டு
பார் பாரென்று
சொல்கிறது…
அசைய முடியாமல்
தடுமாறுவது
விழிகள் மட்டுமல்ல
பாதங்களுமே…
பார்த்த மாத்திரத்தில்
விலங்கிட்ட பெண்ணே!
விலகிட முடியாமல்
தவிக்கிறது என் நெஞ்சே!!!