உன் விழிகளில் தெரிந்த காதலை மறுத்து
தூண்டுகிறாய் ஆசையை
பெண்ணே!
மாறனை வரவழைப்பேன்
காதல் கணைகள் தொடுப்பதற்கு…
ரதியை உதவி கேட்பேன்
தூது செல்வதற்கு…
தென்றலை அனுப்பிடுவேன்
உன் இருப்பிடம் அறிவதற்கு…
வெண்ணிலவை துணைக்கழைப்பேன்
உன்னை சந்திப்பதற்கு…
உனதுள்ளம்
என்னை நாடும்வரை
ஓயமாட்டேன்
கண்ணே!!!