மழைக்காலத்தில் சளித் தொல்லையிலிருந்து விடுபட,
தூதுவளை சம்பல்
தூதுவளை இலை – 20
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 3 அல்லது பெரிய வெங்காயம் சிறியது – 1
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
யாவற்றையும் அம்மியில்/மிக்ஸியில் கெட்டியாக அரைத்து சாதத்துடன் உண்ணலாம்.
தூதுவளை ரசம்
தூதுவளை இலை – 20
மல்லி – 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 தேக்கரண்டி
சின்ன சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளிக்கரைசல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிது
நீர் – 2 கப்
பொடியாக நொறுக்கிய மல்லி, மிளகாய், மிளகு, சின்ன சீரகம் என்பவற்றுடன் தூதுவளை இலை, மஞ்சள் தூள், புளிக் கரைசல், உப்பு, பெருங்காயம் யாவற்றையும் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.