புவியெங்கும் சுற்றி
தடையெல்லாம் தாண்டி
உலா வரும்
காற்றே!
வடக்கிலிருந்து வாடைக்காற்றாய்
கிழக்கிலிருந்து கொண்டல் காற்றாய்
தெற்கிலிருந்து சோழகக் காற்றாய்
மேற்கிலிருந்து கச்சான் காற்றாய்
வருகின்ற காற்றே!
சீற்றம் கொண்டு புயல் காற்றாய்
வீசுகின்ற காற்றே!
நித்தம்
காதல் கொண்டு என்னைத் தழுவி
தென்றல் காற்றாய் வீசாயோ
இன்பம் அள்ளித் தாராயோ!!!