தேடி வந்த காதல்
மனதை புரிந்து வந்த காதல்…
நாடி வந்த காதல்
அன்பை சுமந்து வந்த காதல்…
அலட்சியம் காலம் கடத்த
தொடர்ந்து வந்த காதல்…
இறுதியில் உணரவைத்த
உண்மைக் காதல்…
அதனை – இறுகப் பற்றி
இதயத்துள் வைத்து
இந்திரலோகத்தை
கொண்டு வந்தேன்
இனிமையை வாழ்வினில்
கண்டுகொண்டேன்…