பற்றீஸ்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
மசலாத்தூள், மிளகாய்த்தூள்
உப்பு, புளி
தேங்காய் எண்ணெய்
கோதுமை மா – 250 கிராம்
உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிறிதளவு எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை வதங்கவிட்டு அதனுடன் வெட்டிய உருளைக்கிழங்கையும் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புளி தேவையான அளவு சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கிளறி நீர் வற்றி பிரட்டல் கறியானதும் இறக்கவும்.
கோதுமை மாவுடன் தேவையானளவு உப்பு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பரோட்டா பதம் வரும் வரை நீர் சேர்த்து குழைக்கவும்.
குழைத்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, மெல்லிய தட்டையாக தட்டி, வட்ட வடிவமாக வெட்டி எடுக்கவும். அதில் உருளைக்கிழங்கு கறி சிறிதளவு வைத்து அரைவட்டமாக மடித்து ஓரத்தை சேர்த்து பிரியாமல் நசித்து அதில் முள்ளுக்கரண்டியால் அடையாளமிட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.