வாரம் இரு தினங்கள்
விடுமுறையில் வளர்வதும்…
மிகுதி ஐந்தில்
உன் பிரிவால் தேய்வதும்…
அந்த நிலாவைப் போலானதே
என் வாழ்க்கை…!!!
இல்லை இல்லை…
அந்த நிலாவை விட
மோசமானதே
என் வாழ்க்கை!!!
அவளுக்கோ
வளர்வதும் தேய்வதும்
சமமானது…
எனக்கோ
தேயும் காலம்
அதிகமானது…
கண்ணா!
பழித்துச் சிரிக்கிறாள்
நிலா
என்னைப் பார்த்து…
விரைவில் வந்து
உன்னுடன்
என்னை அழைத்துச் சென்று
அழித்திடு
அவளது கேலிச் சிரிப்பை…!!!
துடைத்திடு
எனது பிரிவுத் துயரை!!!