துன்பங்கள் தோல்விகள்
சோதனைகள் இழப்புக்கள்
சூழும்போது
முடங்கி
மூலையில் இருப்பதாலும்
ஓடி
ஒளிவதாலும்
அவை
அழிந்துவிட மாட்டா…
வெவ்வேறு வடிவங்களில்
துரத்திக்கொண்டே இருக்கும்…
துன்பங்களையும் சோதனைகளையும்
எதிர்கொண்டு
தோல்விகளையும் இழப்புகளையும்
சுவீகரித்து
தவறுகளைத் திருத்தி
நேர்வழியில்
நம்பிக்கையுடன்
முன்னேறிச் செல்ல
துன்பங்கள் கலைவதும்
சோதனைகள் துச்சமாவதும்
நிச்சயம்…
இழப்புகளுக்கு ஈடான வரவுகளும்
வெற்றிகளும்
கிடைப்பது
உறுதி…