அன்பு பண்பு
நேர்மை ஒழுக்கம்
நம்பிக்கை துணிவு
யாவும்
அழைத்துச் செல்லும்
வெற்றிப் பாதையில்
நம் கை பிடித்து
இருவருக்கு மட்டும்
பயந்து பணிந்து
வாழ்ந்தால்…
எமக்குள்ளே குடியிருக்கும்
கடவுளுக்கும் மனசாட்சிக்குமே…
இருவருமே
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
நாம்
விதைப்பதை…
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
தருவதற்கு
விளைச்சலை…!!!
விதைத்தது தானே விளையும்…
புரிந்து
நல்லதையே விதைப்போம்…