நான் என்ற சொல், ஒருவர் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்டுவதற்கு கூறப்படுவதாகும். அடுத்தவர்களை பெயரோ அல்லது உறவுமுறையோ கூறி அடையாளப்படுத்துவது போல தன்னைத் தானே கூறுவது நான் என்ற வார்த்தை.
நான் என்ற வார்த்தை பிரயோகிக்கையில் அதில் அகங்காரம், ஆணவம், அகந்தை என்ற உணர்வுகள் தெரியும்போது அந்த சொல்லின் தன்மை முற்றிலும் மாறுபடுகிறது.
நான் ஒரு கருவியே. என்னை இயக்குவது மேலான ஒரு சக்தி. அதுவே கடவுள். இந்த உண்மையை உணர்ந்து செயற்படும்போது அகங்காரம், ஆணவம், அகந்தை போன்ற உணர்வுகள் தோன்றாது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகள் “எல்லாம் அவன் செயல்”, “எல்லாப் புகழும் இறைவனுக்கே”.
குருவிடமும் ஞானிகளிடமும் உரையாடும்போதும், கடவுளை வணங்கி வழிபடும்போதும் தன்னை ‘அடியேன்’ என்று குறிப்பிடுவது சிறப்பாகும். அந்த வார்த்தையில் தெய்வீகத் தன்மையும் பணிவும் பக்குவமும் காணப்படுவதுடன் தன்னை உணர்ந்து செயற்படுவதும் தெரிகிறது.
*****