நிம்மதியை தேடும் மனிதா!
உன்னுள் வைத்துக்கொண்டே
வௌியில் ஏன் தேடுகிறாய்…
உன்னைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லதையே பார்…
நல்ல விஷயங்களை கேள்…
கெட்டவை பேசும் இடங்களில்
நிற்காதே…
தீயவை நடக்கும் இடங்களிலிருந்து
விலகிச் செல்…
நல்லவற்றை நினை…
நல்ல செயல்களைச் செய்…
நிம்மதியை
தேடத் தேவையில்லை
அது
தானாகவே உனக்குள் வந்துவிடும்!!!