பார்த்ததும்
சட்டென்று வந்து ஒட்டிவிட்டாள்
இதயத்தில்
பலப் பல சுவைகளை தருகின்றாள்…
காதலில் உருகி இனிக்கின்றாள்
தடைகளை நினைத்ததும் உறைக்கின்றாள்…
எதிரிகளை பார்த்ததும் கசக்கின்றாள்
எட்டாப் பழமாய் புளிக்கின்றாள்…
புரிந்ததும்
பட்டென்று கழன்று வீழ்ந்துவிட்டாள்
இதயத்தில்
நிம்மதி தந்து சென்றுவிட்டாள்!!!