கோது, தோல் நீக்கிய நிலக்கடலை பருப்பு – 200 கிராம்
பட்டர் – 100 கிராம்
சீனி – 400 கிராம்
மா – 400 கிராம்
முட்டை – 2
வனிலா – 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பௌடர் – 3 தேக்கரண்டி
சீனியையும் முட்டையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். பின் அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாக அடித்தபின் அந்த கலவையுடன் மிகுதி பொருட்களை சேர்த்து குழைத்து, எலுமிச்சம்பழ அளவில் உருண்டைகளாக பிடித்து அவற்றை தட்டையாக்கி, மாஜரீன் பூசிய தட்டில் இடைவௌி விட்டு அடுக்கி 180 பாகை C யில் 20-25 நிமிடங்கள் ஒவனின் நடுப்பகுதியில் வைத்து பேக் பண்ணவும்.
குறிப்பு – முட்டை சேர்க்காமல் செய்வதென்றால், முட்டைக்குப் பதில் யோக்கட் சேர்க்கவும்.