கோது, தோல் நீக்கிய நிலக்கடலை பருப்பு – 1 கப்
சீனி (sugar) – 1 கப்
ஒரு தாச்சி சட்டியில் சீனியை போட்டு கரையும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
கரைந்ததும் அடுப்பை நன்றாக குறைத்து நிலக்கடலை பருப்பை சேர்த்து கிளறி உடனே தட்டையான பலகையில் கொட்டி உருட்டுக் கட்டையால் தேய்த்து பரப்பி, சூட்டுடனே தேவையான அளவிற்கு கத்தியால் கீறி விடவும்.
பின் ஆறியதும் உடைத்து எடுக்கவும்.