விண்ணிலிருந்து இறங்கி வந்த
தாரகை நீயோ
என் உள்ளத்தில் பதிந்திருந்து
ஒளி வீசி மின்னுகின்றாய்!!!
மலரிலிருந்து வீழ்ந்துவிட்ட
தேன் துளி நீயோ
என் உள்ளமது ஏந்திடவே
உள்ளிருந்து இனிக்கின்றாய்!!!
தென்றலோடு தவழ்ந்து வரும்
கவிதை நீயோ
என் உள்ளத்துள் புகுந்திருந்து
இதமாக தழுவுகின்றாய்
இன்னிசை பாடி மயக்குகின்றாய்!!!