விடியல் தரிசனம்
விழிகளுக்கு விருந்தளிக்க
நிறைகிறது நெஞ்சம்
அழகாகிறது பிரபஞ்சம்…
என் வாழ்வில்
ஒளியேற்றிச் செல்லும்
சூரியன் நீயே…
வண்ணங்கள் சேர்த்து
மெருகேற்றும்
வானவில் நீயே…
எண்ணங்களில் இணைந்து
இனிமை தரும்
மன்மதன் நீயே…
கனவுகளில் வந்து
குறும்புகள் செய்யும்
காதலன் நீயே நீயே!!!