உள்ளத்தில் புகுந்தவனை
கணவனாய் தர வேண்டி
வரம் கேட்டேன்
முருகனிடம்
தினம் உருகி
வரம் கேட்டேன்…
சொல்லாத காதலை
சொன்னேன் கந்தனிடம்
சேர்த்துவைக்கும் பொறுப்பை
கொடுத்துவிட்டேன் அவனிடம்…
அதிசயம் நிகழ்த்திவிட்டான்
ஆசையை நிறைவேற்றிவிட்டான்
ஊமைக் காதலுக்கு
உயிர் கொடுத்துவிட்டான் வேலன்…
அந்த நொடி
பக்தியாய்
காதல் கொண்டேன்
முருகனின்மேல்
பித்தாய்
காதல் உணர்ந்தேன்…
இனிதே ஆரம்பமாகி
தொடர்ந்தது
வாழ்க்கைப் பயணம்…
மழலைகள் தந்தான்
கண்டு களித்தான்
ஆறுமுகன்…
சந்தோஷ தருணங்களில்
நன்றி சொல்வேன்
கவலைகளை
முறையிடுவேன்
துயரங்களை
பஞ்சாய் பறக்கச் செய்வான்
குமரன்…
ஒருநாள்…
துன்பப் புயலில் சிக்கினோம்
நிலை குலைந்து அல்லல் பட்டோம்
பல நாள்…
கரை சேர்ந்தோம்
வேலனின் துணையுடன்
மனதில் காயங்களுடன்…
பன்னிரு கரங்கள் கொண்டு
காயங்கள் ஒவ்வொன்றையும்
ஆற்றி வருகையில்
உணர்கிறேன்
முருகனின் காதலை
இந்த பக்தை மேல் பொழியும்
கருணைக் காதலை…