
நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை.
*****
எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்
உறங்கி கிடந்தால் சிலந்தி வளையும் நம்மை சிறை பிடிக்கும்.
*****
உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்.
புரிகின்ற வரை
வாழ்க்கையும் ஒரு புதிர் தான்.
*****
தலை குனிந்து என்னைப்பார்,
தலை நிமிர்ந்து உன்னை பார்க்க வைப்பேன்.
இப்படிக்கு புத்தகம்.
*****
நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்பொழுதுமே கட்டியே வை.
*****