
“வாழ்வில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பும்போது, உங்களிடம் இருக்கும் அனைத்திலும் முழு ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் வாழ்விற்கு எது உகந்ததோ அதை உங்கள் வாழ்வே ஈர்த்துத் தீர்மானிக்கும் . அது ஒருபோதும் தவறாவதில்லை.”
*****
“வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது, நீங்கள் அனுமதித்தால் தவிர.”
*****
“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு அவசியம்.”
*****
“எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.
அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.”
*****
“குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது.
‘சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே,
உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?’
மீன் சொன்னது.
‘இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.
அந்த வகையில் இந்தக் குளத்தில் எனக்கு நிறைய கடமை உண்டு.
கடமையை செய்பவர்களுக்கே உரிமை அதிகம்’ என்றது மீன்.
சுதந்திரமாய் இயங்க சரியான வழி கடமையைச் செய்வதுதான்.”
*****