
” நிராகரிக்கப்பட்டவுடன் உங்கள் முதல் எதிர்வினை, வருத்தமாகவோ, கோபமாகவோ, ஆத்திரமாகவோ, விரக்தியாகவோ இருக்கக் கூடாது. மாறாக, இப்படி ஒருவரை நிராகரித்து விட்டோமே என அவர் வருந்தும் வண்ணம் வளர்ந்து காட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைப்பதே தக்க எதிர்வினை….”
*****
“வெற்றி என்பது உங்களைத் தேடி வருகிற சொந்தமல்ல.
நீங்கள் தேடிப்போக வேண்டும்.
ஆனால் நீங்கள் வெற்றி பெற்றதும் உங்கள் சொந்தங்கள் உங்களை தேடி வரும்.”
*****
“எங்கோ யாருக்கோ துளி கண்ணீரை சிந்தச் செய்யுமானால்
உங்களுடையது புன்னகை இல்லை நஞ்சு.”
*****
“தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல ‘உழைப்பு’
கூட்டைப் பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல ‘விடாமுயற்சி’.”
*****
“யாராவது உங்களை குறை சொன்னால் கோபப்படாதீர்கள்.
அதனை கூர்ந்து கவனியுங்கள்.
நீங்கள் உங்களுக்காக சிந்திக்கவேண்டியதை அவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள்.
உங்கள் நேரத்தை மிச்ச படுத்தியிருக்கிறார்கள்.
தங்களை பற்றி சிந்திக்காமல் உங்களை சிந்திக்கும் மனிதர்கள் மீது கோபம் எதற்கு?”
*****
“ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில் தயங்கக் கூடாது. இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான்.
மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள், நிரந்தரமாக புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள்.”
*****