
“கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தை
கவலையுடன் எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .”
*****
“இருள் என்று தெரிந்தும் கண்களை திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம்.
அதுபோல் தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்துகொண்டிருப்போம் வெற்றி காணும்வரை.”
*****
“ஒர் இளவரன் முன் தேவதை தோன்றி, ‘விரும்பியதை கேள் தருகிறேன்.’ என்றது.
‘கலைகள் யாவிலும் நான் சிறந்து விளங்க வேண்டும்.’ என்றான். தேவதை அப்படியே அருளி மறைந்தது. அழகு, செல்வம், அன்பான துணை என எல்லாம் இளவரசனுக்கு வாய்த்தன. ஒவியம், சிற்பம், இசை என எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கினான்.
ஒருநாள், அவனது அரண்மனைக்கு வந்திருந்த துறவியின் முன் அவன் மண்டியிட்டான். ‘இத்தனை இருந்தும் எனக்கு மனநிறைவு இல்லையே, ஏன்?’ என்று கேட்டான்.
துறவி சொன்னார்,
‘உன் இலக்கை நோக்கி, உனக்கான பாதையை நீ தேர்ந்தெடுத்து நடந்தால் போதும். பார்க்கும் அத்தனை பாதைகளிலும் நடக்க முயன்றால், குழப்பமும் களைப்பும்தான் மிஞ்சும்.’ “
*****
“எதிர்த்துப் போரிடுபவனுக்கு தடைகள் யாருமில்லை.
போராட பயப்படுபவனுக்கு தடைகள் தன்னைத் தவிர யாருமில்லை.”
*****