
“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.”
*****
“ஆழமான அன்புக்கும் உண்மையான நட்புக்கும் மதிப்பு கொடுக்காதவர்களை தூக்கி எறியவும் தயங்காதே.”
*****
“செய்த உதவியை மறக்க வேண்டும்.
பெற்ற உதவியை மறக்கக் கூடாது.”
*****
“பிறருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.
தற்பெருமை பேசுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.”
*****
“எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதைவிட செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.”
*****