
“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்
வெற்றி நிச்சயம்..!”
*****
“மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களை பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையை பாதுகாக்கும்.”
*****
“என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக்குரியவைதான்.
நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அது போல மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு”
*****
“சகித்துச் செல்லவேண்டிய சூழ்நிலைகளைக் கடக்க அன்பைவிட வேறு எதுவும் உதவிட முடியாது.”
*****
“சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதைவிட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு. உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்.”
*****
“மற்றவர்களை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கக்கூடாது.
நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவதுதான் நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கவேண்டும்.”
*****