
“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
“கடந்த வினாடியை இந்த வினாடிக்கு சுமந்துகொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரமானவராக இருக்கின்றார்.”
*****
“இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம்.
இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.”
*****
“அறிவு என்பது நதியை போன்றது.
அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு அமைதியாக இருக்கும்.”
*****
“வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில்தான் புதைந்து கிடக்கிறது.
பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில்தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது.”
*****
“நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.”
*****
“வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.”
*****