
உயிர் காக்கும் தந்திரம்!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
*****
“உங்களின் கோபத்துக்காக வேறு யாராலும் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் கோபத்தாலேயே நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.”
*****
“வாழ்க்கை கால்பந்து விளையாட்டு போல.
நீங்கள் ஒரு கோல் அடிப்பதற்கு, 10 பேர் உதவவும், 11 பேர் எதிர்க்கவும்தான் செய்வார்கள்.”
*****
“வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்களையும் அனுபவித்துவிடுங்கள், நாளை ஒருவேளை திரும்பிப் பார்க்கையில் அவை தவறவிடப்பட்ட பேரின்பமாகத் தெரியலாம்.”
*****
“அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும்.”
*****
“நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான் என்று நாம் உணரும் காலத்தில், நீ சொல்வதெல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு ஒரு மகன் பிறந்துவிடுகிறான்.”
*****