
சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!
உண்மைதானே.
*****
உனக்காக இருப்பேன்
என்பது குடும்பம்
உனக்காக மட்டும் இருப்பேன்
என்பது காதல்
எனக்கென்ன…அதுதான் நீ
இருக்கிறாயே
அதுதான் நட்பு…
*****
முயற்சி என்பது விதை போல ..
அதை விதைத்துக்கொண்டே இரு
முளைத்தால் மரம்
இல்லை என்றால்
மண்ணிற்கு சிறந்த உரம்!!
*****
“ஜெயித்துக்கொண்டே இரு. நீ வளரும்வரை அல்ல, உன்னை வெறுத்தவர்கள் பார்த்து வியந்து வாழ்த்தும்வரை.”
*****
“நீ ஏழையாக இருந்தாலும் மனதில் பணக்காரனாக இரு.
பணக்காரனாக ஆன பின்னும் நடத்தையில் ஏழையாக இரு.”
*****
“ஒருமுறை வாழ்க்கை உன்னை கீழே தள்ளி துன்பம் தந்து நீ மீண்டவன் என்றால், மறுமுறை வாழ்க்கை உன்னை கீழே தள்ள அது துன்பமாகவே தெரியாது, மீண்டும் எழுந்து நிற்பதால்.”
*****