
“லட்சியத்துடன் வாழுங்கள்
விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.
நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.
நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான்.
மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டு விடாதே.
உன்னைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் உள்ள தீமையைப் போக்கி நன்மையை நிச்சயம் அவன் அருள்வான்.”
*****
“எல்லோருடைய தேவைக்கும் இந்த உலகம் போதுமானது.
ஆனால் எல்லோருடைய பேராசைக்கும் போதுமானதல்ல.”
*****
“நீ யார் என்று உலகுக்கு சொல்லாதே,
வாழ்ந்து காட்டு.”
*****
“ஆசை பேராசையாகவும்
அன்பு வெறியாகவும்
மாறும்போது
அமைதி
அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்கின்றது.”
*****
“உங்களைவிடத் துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறையப்பேர் இருப்பதை கண் திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.”
*****
“வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
*****