
“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.”
*****
“உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.
ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.”
*****
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.”
*****
“குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையே.
என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல.”
*****
“நீ மேலே மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.
நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்.”
*****
“அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.”
*****
“பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்.
நடக்க முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள்.
முன்னேற்றமே முக்கியம்.”
*****
“இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை, இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை.”
*****
“நீங்கள் செய்வது அத்தனையும் சரியானதாக இருக்கவேண்டும் என்று எண்ணாதீர்கள். சிலசமயம் நீங்கள் செய்யும் தவறுகள் கூட உங்களை சிறந்த மனிதராக மாற்றிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்”
*****
“உண்மைக்காக எதையும் துறக்கலாம்.
ஆனால் எதற்காகவும் உண்மையை துறக்கலாகாது.”
*****