“உன்னால் பலருடன் ஒத்துப்போக முடிந்து ஒரு சிலருடன் மோதல் என்றால் தவறு உன்னுடையதல்ல.
வெகு சிலருடன் மட்டும் ஒத்துப்போக முடிந்து பலருடன் மோதல் என்றால் உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்.”
*****
“அழகான சமூகம் நம்முடையது.
அதில் இயற்கை தான் நமக்குக் கிடைத்த வரம்.
அதையும் நீ அழிக்க அழிக்க, அழியப் போவது இயற்கை அல்ல. நீதான் மனிதனே.”
*****
“உனக்காக சிரிக்கும் உதடுகளை விட உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி. அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்.”
*****
“ஒரு கப்பல் தண்ணீரில் மிதக்கும். ஆனால் அந்தத் தண்ணீர் உள்ளே புகும்போது மூழ்கிவிடும். அது போலவே உலகின் முரண்பாடுகள் உன்னை ஒன்றும் செய்ய முடியாது, அதற்கு நீ இடம் கொடுக்காதவரை.”
*****
“ஒன்றுமில்லாமல் இருக்கும்போது நீ காட்டும் பொறுமை,
எல்லாம் இருக்கும் போது உன் நடவடிக்கை,
நீ யார் என்பதைப் காட்டும்.”
*****
“நாம் இறந்தகாலத்தை நினைத்தால் ஒரு சுகம் கிடையாது. ஆனால் நிகழ்காலத்தை சந்தோஷமாக கழித்தால், இறந்தகால நினைவுகளுக்கு மருந்து போட்டது போலாகும்.”
*****
“பிரச்சனையையே பார்த்தால் அது பெருகிவிடும்.
தீர்வைப் பற்றி ஆலோசித்தால் வாய்ப்புகள் பெருகிவிடும்.”
*****
“சொல்லுவதில் பாதியை நம்புபவன் கெட்டிக்காரன்.
மறு பாதியை அறிந்துகொள்பவன் அதிபுத்திசாலி.”
*****