“நல்லது செய், நல்லது நடக்கும்.
நல்லது நினை, நல்லது நிலைக்கும்.
நல்லது நாடு, நல்லது நாடும்.
நல்லது விதை, நல்லது விளையும்.
நல்லது படி, நல்லது படியும்.
நல்லது வாழ்த்து, நல்லது வளரும்.
நல்லது குடு, நல்லது குவியும்.”
*****
“பொறுப்பு என்பது பாரம் அல்ல, வாய்ப்பு.
திறமையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம்.”
*****
“தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.”
*****
“தன்னம்பிக்கையுடன் செயல்படும் எந்தக் காரியமும் வீண் போகாது.”
*****
“நண்பர்களைப் பற்றி நல்லதைப் பேசு.
விரோதிகளைப் பற்றி ஒன்றும் பேசாதே.”
*****
“தகுதி இல்லாதவரைப் புகழ்தல், ஒரு கொடிய பாவச் செயல்.
பாவச் செயல்கள், முடிவில் பெரும் துயரத்தைக் கொடுக்கும்.”
*****