
“நம் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு அப்படி வர வேண்டும், இப்படி வரவேண்டும் என பல கனவுகளைக் காண்கிறோம்.
கனவு காண்கிறோம் என்பதற்காக அது உடனே நிஜமாகி விடாது.
அந்தக் கனவு நம் நித்திரையைக் கலைக்க வேண்டும்.
சதா நம்மைத் துரத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அக்கனவை மெய்ப்படுத்த நம்பிக்கையோடு தினமும் உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும்.
அப்போது தான் ஒரு கனவு நிஜமாகும், சாதனைகளாகும்.”
*****
“ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.”
*****
“நாளை என்ற ஒரு நாள் உனக்கானது என்றில்லை.
ஆனால் இன்று என்ற இந்த நாள் உனக்கானதுதான்.
*****
“உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாகச் செய்.
நாளை அதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.”
*****