“எம்மிடம் மேலதிகமாக இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது சிறந்தது.
அதிக பணத்தையும், அதிக பொருட்களையும் பயன்படாது சேகரித்து வைப்பின் அதனால் விளையத்தக்கது ஒன்றும் இல்லை.
வறுமையுற்றவர்களுக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும், உதவும் நிறுவனங்கள் தெரிந்தால், அதனை வழிகாட்டி உதவுதலும் உதவியே.
இதனை விடுத்து வாயளவில் பாவம் – பரிதாபம் சொல்வதில் எவ்வித பயனும் இல்லை.
எனவே வறுமை என்ற கொடிய நோயை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் குற்றச் செயல்களை ஓரளவு தடுக்க முடியும்.”
*****
“ஒவ்வொரு ஆணும் மறக்கக் கூடாத கவிதை:
‘உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்,
உன் கருவை சுமக்கும் பெண்ணையும்
நீ கல்லறை செல்லும்வரை நேசி.’ “
*****
“ஆயிரம் பேரை நண்பராக வைத்திருப்பது உனக்குப் பெருமையல்ல.
ஆயிரம் பேர் எதிர்க்கும்போது உனக்காக அவர்களை எதிர்க்கக்கூடிய நண்பன் ஒருவனை வைத்திருப்பதே உனக்குப் பெருமையாகும்.”
*****
“வெற்றி வந்தால் பணிவு அவசியம்.
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்.
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.”
*****
“நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.
நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி.”
*****