“அன்பு கொடு, மரியாதை கொடு என அடுத்தவரிடம் பிச்சைக்காரனாக இருக்காதே.
கேட்காமலே கொடுக்கும் செல்வந்தனாக இரு.
அன்பும் மரியாதையும் கேட்டுப் பெறவேண்டியவை அல்ல.
கொடுத்துப் பெறவேண்டியவை.”
*****
“உங்கள் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.
உங்கள் சிந்தனைகளையும், செயல்களையும் அடக்கி ஆளக் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த மூன்றும் உறுதிப்பட்டுவராவிடில் நீங்கள் படித்த, கேட்ட அனைத்து நல்ல விஷயங்களும் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும்.”
*****
“பேசும் முன்னால் கவனமாகக் கேள்.
எழுதும் முன்னால் நீ யோசிக்கத் தவறாதே.
செலவழிக்கும் முன்னால் நீ சம்பாதிக்கப் பார்.
பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப் பார்.”
*****