“பேசக்கூடிய இடத்தில் நீ பேசாமல் இருந்தால் அது உனக்கு இழிவைத்தரும்.
பேசக்கூடாத இடத்தில் நீ பேசுவது உனக்கு அழிவைத்தரும்.”
*****
“உன்னைப் புண்படுத்தும் விஷயம் எது என்று உனக்கு தெரிந்துவிட்டால்
அது மற்றவர்களையும் புண்படுத்தும் என்பதையும் நீ உணரவேண்டும்.”
*****
“சந்தித்தே ஆகவேண்டிய பிரச்சனைகளைக் கண்டு ஓடினால் தெரு நாய் போல் அது நம்மைத் துரத்தும்.
துணிவு என்ற கல்லை கையில் எடுத்தால் அது தலை தெறிக்க ஓடும்.
அஞ்சாமையை அணிகலனாகப் பூண்டவர்களுக்கு மலையளவு துன்பங்களும் கடுகளவாகும்.”
*****
“ஒரு மடங்கு திறமை
இரு மடங்கு தேடல்
மூன்று மடங்கு பொறுமை
என்ற விகிதத்தில் உன்னை நீ தயார்படுத்தினால் மட்டுமே
உன் லட்சிய இலக்கை அடைய முடியும்.”
*****