“இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர அன்புடனும் பாசத்துடனும் பேசுங்கள். அவை உங்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும்.
எப்போதும் அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசி அனைவருடனும் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்பாகப் பேசுபவர்கள் இயல்பாகவே நல்ல செயல்களையே செய்வார்கள். இதனால் நமது வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கையாக நம்மாலேயே மாற்றப்படும்.
எனவே, அன்பான வார்த்தைகளையே பாசத்துடன் பேசுங்கள்.”
*****
“முதற்கடமை என்பது ஒருவன் பிறரைத் திருத்துவது அல்ல.
தன்னைத்தானே முதலில் திருத்திக் கொள்வதுதான்.”
*****
“மிகுந்த நேர்மையுடனும் நாணயத்துடனும் வாழ மூன்று மாய மந்திரச் சாவிகள் நம்மிடம் உள்ளன.
* ‘முடியாது’ என்று சொல்ல வேண்டிய இடங்களில் துணிவுடன் முடியாது என்று சொல்லிவிடுங்கள்.
* மிகுந்த துணிவுடன் வாழ்வில் எதிர்ப்படும் உண்மைகளைச் சந்தியுங்கள். பிரச்சனைகளைத் துணிவுடன் சந்தித்தால்தான் அதிலேயே உள்ள தீர்வையும் நம்மால் காண முடியும்.
* எதுவொன்றையும் நேர் வழியிலேயே பெற துணிவுடன் முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், இதுவே நேரான வழி. பாதுகாப்பான வழியும் கூட.”
*****