“சில நேரங்களில் ஏற்படும் தயக்கமும் தடுமாற்றமும் நாம் பெரிய அளவில் விழுவதைத் தடுக்க உதவும்.
எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சரியாக முடிவு எடுக்காதது குறித்து வருந்திக் கொண்டிராதீர்கள்.
அனைத்தும் நன்மைக்கே.”
*****
“எந்த நேரத்திலும் ஆணவம், கர்வம் போன்ற குணங்கள் ஒருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
அப்படி ஏற்பட்டுவிட்டால் பல மடங்கு திறமையுள்ள மனிதன்கூட எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது.”
*****
“நேற்றைய தினத்தை மறந்துவிடுங்கள்.
இன்று, இந்த நாளை பயன் மிகுந்த நாளாய் எண்ணுங்கள்.
அதில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே மறைந்து கிடக்கிறது.”
“நேற்றைய தவறுகள் நாளையும் தொடராமலிருக்க இன்றே திட்டமிட்டு திருத்திக்கொள்கிறவர் யாரோ அவரே புத்திசாலி.
அந்த மனிதர் வெற்றி பெறப் போவதும் உறுதி.”
*****
“மனிதனுக்கு ஊக்கமும் வலிமையும் கொடுத்து அவனை இயங்க வைத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் மூன்று மாபெரும் சக்திகள் அவனுள்ளேயே உள்ளன.
கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை, அன்பு என்ற இந்த மூன்று சக்திகளும் மனிதனுக்கு மாபெரும் பெருமையை ஏற்படுத்தித் தருகின்றன .”
*****