“முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ,
அப்பொழுதே அவனது சக்தி அவனிடம் இருந்து பறந்து போய்விடுகிறது.”
*****
“அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்.
கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க வேண்டும்.”
*****
“இந்த நாள் என் வாழ்நாளில் ஓர் அருமையான நாள் என்று உணர்ந்து வாழுங்கள்.
உலகிலேயே நமக்குக் கிடைத்த அரிய உயரிய பரிசு எது என்றால் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாளாக உணர்ந்து உழைக்கிறோமே அதுதான் உன்னதமான பரிசு.”
*****
“அமைதியான மனம் என்பது நமது மாபெரும் சொத்து.
அதிலிருந்துதான் மகிழ்ச்சி, நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை முதலியன பிறக்கின்றன.
இறைவனை அறிந்து நமது உள்ளத்தை வென்றால்தான் இந்த மாபெரும் சொத்து நம்மிடம் எப்போதும் இருக்கும்.
புறச் செல்வங்களால் வாழ்நாள் நீடிக்காது.
நம்மிடமுள்ள ஆன்மீக நம்பிக்கைதான் அறிவியல் ரீதியாகவும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் உற்பத்திசெய்து தரும்.”
*****