“சென்று போன நாட்களைப் பற்றி வருந்தாதீர்கள்.
எதிர்காலத்தை நினைத்து அஞ்சாதீர்கள்.
இன்று செய்யும் காரியத்தில் முனைப்பாயிருங்கள்.”
*****
“தன்னை அறிந்தவன் ‘ஆசைப்படமாட்டான்’
உலகை அறிந்தவன் ‘கோபப்படமாட்டான்’
இந்த இரண்டையும் உணர்ந்தவன் ‘கஷ்டப்படமாட்டான்’.”
*****
“சிந்திப்பதானால் நிதானமாக சிந்தியுங்கள்.
செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள்.
விட்டுக்கொடுப்பதானால் மனநிறைவோடு விட்டுக்கொடுங்கள்.”
*****
“புன்னகைத்துப் பாருங்கள் நட்புகள் கிடைக்கும்.
பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்.
நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்.
உண்மையாய் உறுதியோடு உழைத்துப் பாருங்கள்
வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்.”
*****