“பிறர் கூறும் எந்தத் தீர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் அஞ்ச வேண்டாம், அது அவசியமும் இல்லை.
உங்கள் மனசாட்சியின் தீர்ப்புக்கு மட்டும் அஞ்சினால் போதும்.”
*****
“நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்.”
*****
“நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.”
*****
“கவலை என்பது கைக்குழந்தை அல்ல,
எல்லா நேரமும் தோளில் சுமக்க.
கவலை என்பது ஒரு கட்டுச்சோறு,
அதை தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்.”
*****