“நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியவரும்போது
நாம் சொன்ன அத்தனை உண்மைகளும்
சந்தேகத்திற்கு இடமாகின்றன.”
*****
“ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.
விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.”
*****
“உங்களுக்காகப் பொய் சொல்பவன்,
நாளை உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்.”
*****
“வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட
யாரையும் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது.”
*****
உங்களை நேசிப்பவர்களிடம் பொய் சொல்லும்போது, அதை அவர்கள் நம்பிவிடும் முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.
உங்களை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக, தங்களது உணர்ச்சிகளை மறைத்துக்கொள்கிறார்கள்.”
*****