“தீமை எதுவென்றால் அடிமைத்தனம் தான்.
துறவுக்கும் அடிமைப்படலாகாது.
எது வருகிறதோ அதை ஏற்கவேண்டும்.
அது போய்விடுமானால் அதை இழக்கவும்
சித்தமாக இருக்க வேண்டும்.”
*****
“மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.”
*****
“பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட
நீங்கள் தான் அதைப் பெருமைப்படுத்த வேண்டும்.”
*****
“நீங்கள் விதைப்பதைத் தான் அறுவடை செய்யப்போகிறீர்கள்
அப்படியிருக்க,
அதை ஏன் நல்ல எண்ணங்களாக விதைக்கக் கூடாது”
*****
“படிப்பு எதற்கு?
அறிவு பெற.
அறிவு எதற்கு?
மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து
மற்ற மனிதனுக்கு உதவியாய்
தொல்லை கொடுக்காமல்
வாழ்வதற்கு”
*****