“நேற்று கிடைத்த மகிழ்வையும்
நாளை கிடைக்கப்பொகின்ற மகிழ்வையும்
நினைத்து
இன்றைய துக்கத்தை
எளிதாய் வெல்வோம்.”
“சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியாது.
ஆனால் அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம்.”
“கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்”