“புன்னகையும் மௌனமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள்.
புன்னகை – பல பிரச்சனைகளைத் தீர்க்கும்
மௌனம் – பல பிரச்சனைகள் வர விடாமல் தடுக்கும்.”
*****
“துணிச்சல் எண்ணற்ற எதிரிகளை வென்றுவிடும்;
எனவே துணிச்சல் நம்முடைய நெருங்கிய நண்பனாக இருக்கட்டும்.”
*****
“உனக்கு உதவ உன் மூளையை பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் மனதைப் பயன்படுத்து.”
*****
“சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதைவிட நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு. உன் வாழ்க்கையில் நிறைவும் சந்தோஷமும் இருக்கும்.”
*****
“துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே.
காதலை நினைத்து வாழ்க்கையை இழக்காதே.
சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே.
தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே.”
*****