“வேஷம் இல்லாத உண்மையான அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து.
அந்த அன்பே பொய்யானால், உலகில் அதைவிட கொடிய நோய் வேறு எதுவும் கிடையாது.”
*****
“வாழ்க்கையில் மூன்று விதமான மனிதர்களை ஒருபோதும் மறக்காதீர்கள்.
1. கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு உதவிசெய்தவர்.
2. கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு உதவிசெய்யாதவர்.
3. இந்தக் கஷ்டத்திற்கு உங்களை ஆளாக்கியவர்.”
*****
“அழகு என்பது பொருள்களில் இல்லை. அது பார்வையில்தான் இருக்கிறது.
உங்களிடம் இல்லாததை எண்ணி வருந்துவது மூடத்தனம்.
உங்களிடம் இருப்பதை எண்ணி மகிழ்வதே வாழ்க்கையின் வெற்றிக்கு மூலதனம்.
உங்களிடம் இருக்கும் நிறைகளைப் பற்றி எண்ணுவதால் உங்களது மனம் உற்சாகமாகும்.”
*****
“எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்.”
“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.”
“நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிக்கரமாக இரு.”
*****
“விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக்கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்.”
*****