“எல்லோரையும் நேசியுங்கள். எவரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு வாழ்நாளைக் குறைத்துவிடும்.”
*****
“அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையைப் பாழாக்கிவிடும்.
கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.”
*****
“வாழ்க்கை என்பது சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தவைதான்.
இவைகளையெல்லாம் போராடி வெற்றி பெற்றவர்களே வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்கள்.”
*****
“செய்யும் வேலையில் ஈடுபாடே இல்லாமல் செய்யும்போதுதான் சோர்வு உண்டாகிறது.
நீ எதைச் செய்தாலும், முன்னேற்றத்திற்கான சாதனம் என்று அதை எடுத்துக் கொள்வாயானால், உனக்கு அதில் ஈடுபாடு ஏற்படும்.”
*****
“ஒரு துளி கண்ணீரைத் துடைப்பது நட்பு அல்ல.
மறு துளி வராமல் தடுப்பதுதான் உண்மையான நட்பு.”
*****
“கஷ்டப்பட்டு செய்யாதே, கடுமையாகிவிடும்.
இஷ்டப்பட்டு செய், எளிமையாகிவிடும்.”
*****