“யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள்.
ஆனால், முடிவை நீ மட்டும் எடு.”
*****
“துன்பத்தின்போதும், தோல்வியின்போதும் நாம் இழக்க வேண்டியவை நம் கண்ணீரையே, நம் நம்பிக்கையை அல்ல.”
*****
“நீங்கள் எதைச் செய்தாலும், அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது அதன் எல்லையைத் தொடுவீர்கள்.
முழுமையில்லாத முயற்சிதான் எப்போதும் சிக்கலை விளைவிக்கும்.”
*****
“பிடித்தவர்கள் கூடத்தான் வாழ வேண்டும் என எண்ணுவது முட்டாள்த்தனம்.
கிடைத்தவர்களுடன் பிடித்த மாதிரி வாழ்வதுதான் புத்திசாலித்தனம்.”
*****
“ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிவாங்குவது போலாகும்.”
*****