“தன்னம்பிக்கையை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான்.”
“பணிவுள்ளவன் எவரையும் வெறுப்பதில்லை. அதனாலேயே அனைவரையும் வெல்கிறான்.”
*****
“பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.”
“தியாகம் செய்யவும், மன்னிக்கவும், நன்றி கூறவும் தெரிந்து கொள்ளுங்கள்.”
*****
“பிறரிடம் நீ எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணத்தை உன்னிடம் வைத்துக்கொள்ளாதே.”
“நீ ஒரு பலமுள்ளவனாக மாற விரும்புகிறாயா? முதலில் உன் பலவீனங்களைப் புரிந்துகொள்.”
*****
“பிறரை வீழ்த்துபவன் உண்மையான வீரன் அல்ல.
உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.”
*****
“நல்லதை செய்கிறவன் உன் எதிரியாக இருந்தாலும் அவனுடன் சேர மறுக்காதே.
ஆனால் கெட்டதை செய்கிறவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும் அவனிடமிருந்து விலக தயங்காதே.”
*****