“மனம் கட்டுப்பாடில்லாமல் எதை வேண்டுமானாலும் கேட்கும், அலை பாயும், ஆனால் அதை அடக்கக்கூடிய மாபெரும் சக்தி உன்னிடம் மட்டும்தான் இருக்கிறது. உன் புத்தியின் சக்தியை முதலில் அறிந்துகொள்.”
“எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்
எல்லாப்படிகளும் கடக்கக்கூடியவையே.
உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே
செயலில் வெற்றியைத் தருகிறது.”
“மன ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே கிடைக்கும்.”
“நம்பிக்கை மட்டுமே வாழ்வின் துன்பங்களை விரட்டும் ஆயுதம்.”
“எந்தத் தொழிலைச் செய்தாலும் இழிவு இல்லை.
எந்தத் தொழிலும் செய்யாது இருப்பதுதான் இழிவு.”